வழக்கு விசாரணையற்ற தடுப்புக் காவல் சட்டம் புதுப்பிப்பு

வழக்கு விசாரணையற்ற தடுப்புக் காவல் சட்டம் புதுப்பிப்பு

1 mins read
5174e11c-82a4-4e40-8fa5-b1caf8b47a92
படம்: - பிக்சாபே

ரகசியக் கும்பல் நடவடிக்கைகள் போன்ற குற்றச்செயல்களுக்கு வழக்கு விசாரணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைப்பதை அனுமதிக்கும் சட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் (தற்காலிகச் சட்டப்பிரிவுகள்) சட்டம் மேலும் ஐந்தாண்டுகள் நீட்டிக்கப்பட்டது.

1955ஆம் ஆண்டு நடப்பில் வந்ததிலிருந்து குற்றவியல் (தற்காலிகச் சட்டப்பிரிவுகள்) சட்டம் 15ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள பாதுகாப்புக்கு மிரட்டலாக அமையும் மோசமான குற்றச் செயல்களைச் சமாளிக்க, இச்சட்டம் முக்கியமானது என்று உள்துறைத் துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் ஏப்ரல் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்