டான் சீ லெங்: கரிம வரி தொடர்பான உதவிக் கட்டமைப்பு உறுதியாவதில் தாமதம்

1 mins read
e71704d4-1c63-4edc-8556-69f587d850ea
கரிம வரி இடைக்கால கட்டமைப்பின் மூலம் நிறுவனங்களுக்கு ஆதரவாக உதவித்தொகை வழங்கப்படும். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கரிம வரி 2024ஆம் ஆண்டு உயர்ந்துள்ளதை அடுத்து நிறுவனங்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க உதவும் கட்டமைப்பு, இன்னமும் உறுதிசெய்யப்படாத நிலையில் உள்ளது.

கரிம வரி அதிகரிப்பு தொடர்பான அறிவிப்புடன் கரிம வரி இடைக்கால கட்டமைப்பு குறித்து முதன்முதலில் 2022ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

இந்தக் கட்டமைப்பு தொடர்பான விவரங்களை 2023ஆம் ஆண்டின் பிற்பாதியில் பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிடுவதாக இருந்தது.

இருப்பினும் கட்டமைப்பு தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் ஓர் ஆண்டு காலத்தில் தெரிவிக்கப்படும் என்று ஏப்ரல் 3ஆம் தேதி வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் கூறினார்.

இது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் ஒரு கட்டமைப்பு என்பதாலும் இதற்காக அரசாங்கம் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் அனைத்துலகத் தரநிலையைக் கருத வேண்டியிருக்கும் என்பதாலும் இந்த விவகாரத்தை மேலும் தெளிவுபடுத்த ஓராண்டு ஆகும் என்றார் மனிதவள அமைச்சராகவும் உள்ள திரு டான்.

குறிப்புச் சொற்கள்