சரக்கு வாகனங்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணத்தைத் தவிர மற்ற பிரிவுகளுக்கான கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
சிறிய வகை கார்களுக்கான கட்டணம் 4.1 விழுக்காடு அதிகரித்து $89,000ஆகப் பதிவானது.
பெரிய வகை கார்களுக்கான கட்டணம் 5.5 விழுக்காடு உயர்ந்து $101,334ஆகப் பதிவானது.
பொதுப் பிரிவுக்கான கட்டணம் 5.4 விழுக்காடு உயர்ந்து $101,002ஆகப் பதிவானது.
மோட்டார் சைக்கிளைத் தவிர மற்ற அனைத்து வகை வாகனங்களுக்கும் இப்பிரிவைப் பயன்படுத்தலாம். ஆனால் இப்பிரிவு பெரும்பாலும் பெரிய வகை கார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 3.2 விழுக்காடு அதிகரித்து $10,000ஆகப் பதிவானது.
சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 3.7 விழுக்காடு குறைந்து $67,501ஆகப் பதிவானது.

