ஒருவரின் ஒப்புதலின்றி அவரை நிறுவன இயக்குநராக பதிவு செய்தவருக்கு $6,500 அபராதம்

ஒருவரின் ஒப்புதலின்றி அவரை நிறுவன இயக்குநராக பதிவு செய்தவருக்கு $6,500 அபராதம்

1 mins read
60493021-88a7-4e0e-9bc7-c4b689960500
மாதிரிப்படம்: - பிக்சாபே

நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் பணியில் ஈடுபாட்டுள்ள நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் உள்ளூர் நபரின் ஒப்புதலின்றி அவரது பெயரைப் பயன்படுத்தி மூன்று நிறுவனங்களை பதிவு செய்தார்.

அவரின் இந்தச் செயலுக்கு அந்த இயக்குநருக்கு ஏப்ரல் 1ஆம் தேதி $6,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கார்ப் நெர்ஜி என்ற நிறுவனத்தின் ஒரே இயக்குநராக செயல்படும் லி பாவ்சு, 41, அந்த உள்ளூர் நபர் மூன்று நிறுவனங்களும் பதிவு செய்யப்படும்போது இயக்குநராகப் பணிபுரிய ஒப்புக்கொண்டதாக கணக்கியல், நிறுவன கட்டுப்பாட்டு ஆணையத்திடம் தெரிவித்திருந்தார்.

நிறுவனச் சட்டத்தின்படி, சிங்கப்பூரில் பதிவு செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் இயக்குநர்களில் குறைந்தது ஒருவராவது உள்ளூரில் தங்கியிருப்பவராக இருக்கவேண்டும்.

திருவாட்டி லி சிரத்தையுடன் கடமையாற்றத் தவறிய இரு குற்றச்சாட்டுகளின்பேரில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி தண்டிக்கப்பட்டார்.

இதுபற்றி விசாரித்த ஆணையம் திருவாட்டி லி வேறொரு நபர் மூலமாக அந்த உள்ளூர்வாசியின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அந்த உள்ளூர்வாசி உண்மையில் தமது ஒப்புதலை வழங்கினாரா என்பதை சுயமாக தெரிந்துகொள்ளவில்லை என்று தனது அறிக்கையில் கூறியது.

குறிப்புச் சொற்கள்