தைவான் நிலநடுக்கம்: சிங்கப்பூரர்கள் இருவரைக் காணவில்லை

தைவான் நிலநடுக்கம்: சிங்கப்பூரர்கள் இருவரைக் காணவில்லை

1 mins read
cfbf0232-1c3a-4222-b5fa-f1c144b28e15
தைவானிய அதிகாரிகளால் மீட்கப்பட்ட எண்மர் பற்றி வெளியுறவு அமைச்சு அறிந்துள்ளதாகவும் அவர்களுக்கு தூதரக உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

தைவானில் ஏப்ரல் 3ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரர்கள் இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏப்ரல் 5ஆம் தேதி கருத்துரைத்த வெளியுறவு அமைச்சு, தைப்பேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் அணுக்கத் தொடர்பில் இருப்பதாகக் கூறியது.

மேலும் இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சு, காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களுக்கு தூதரக உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

இதில் நிலைமையை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருவதாக அமைச்சின் பேச்சாளர் விளக்கினார்.

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஏப்ரல் 4ஆம் தேதி 71 வெளிநாட்டவர் மீட்கப்பட்டனர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் கூறியது. இதில் சிங்கப்பூரர்கள் எண்மரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களில் இருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் தேவையான உதவி வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சு தெரிவித்தது.

தைவானிய அதிகாரிகளால் மீட்கப்பட்ட எண்மர் பற்றி வெளியுறவு அமைச்சு அறிந்துள்ளதாகவும் அவர்களுக்கு தூதரக உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்