தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெலிகிராம் செயலிவழி போதைப்பொருள் குற்றங்கள்: 36 பேர் கைது

1 mins read
55e5dfc2-bdee-498a-9754-adbbf199a596
அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையின்போது போதைப்பொருள் விநியோகம் குறித்து டெலிகிராம் செயலியில் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

டெலிகிராம் செயலி மூலம் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியன்று நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

ஏறத்தாழ $19,000 பெறுமானமுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளிலில் கஞ்சா, ‘ஐஸ்’, கெட்டமின், போதைமிகு அபின், எரிமின் 5 மாத்திரைகள், எக்ஸ்டசி மாத்திரைகள், ஒருவித போதைப்பொருளைக் கொண்ட மின்சிகரெட் கருவிகள் ஆகியவை அடங்கும்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் 32 வயது பெண்ணும் 26 வயது ஆணும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

அந்தப் பெண் காம்பஸ்வேல் டிரைவ் வட்டாரத்தில் உள்ள அவரது வீட்டிலும் அந்த ஆடவர் பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் உள்ள அவரது வீட்டிலும் கைது செய்யப்பட்டனர்.

இருவரது வீடுகளில் இருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்