இணையம் வழியாகச் சிறார் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து வார அதிரடி நடவடிக்கையின் விளைவாக சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா ஆகிய நாடுகளில் சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
இந்தக் குற்றம் தொடர்பாக சிங்கப்பூரில் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூன்று நாடுகளில் 236 இடங்களில் சிங்கப்பூரின் குற்றப் புலனாய்வுத் துறையும் ஹாங்காங் மற்றும் தென் கொரியப் புலனாய்வுத் துறைகளும் அதிரடிச் சோதனைகளை நடத்தின.
கைது செய்யப்பட்டவர்களில் ஆக இளையருக்கு 12 வயது; ஆக மூத்தவருக்கு 73 வயது.
சிங்கப்பூரில் கைது செய்யட்டவர்கள் 18 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சிறார் பாலியல் துன்புறுத்தல் படங்கள், காணொளிகளை அவர்கள் வைத்திருந்ததாகவும் விநியோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
சிலர் வயது குறைந்தோருடன் பாலியல் நோக்கத்துடன் தொடர்புகொண்டதாகவும் நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கூடுதல் மதிப்பீடு செய்யவும் இப்பழக்கத்திலிருந்து விடுபட உதவி வழங்கவும் கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் உள்துறைக் குழுவின் சமூக உதவி அமைப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றங்கள் தொடர்பாக சிங்கப்பூரில் 44 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கணினிகள், கைப்பேசிகள் உட்பட பல்வகை மின்னணுச் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.