தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விலங்குகளை குளிர்விக்க மின்விசிறிகள், குளிர்ந்த நீர், பனிக்கட்டியுடன் கூடிய உணவு

1 mins read
2d8afa58-a047-4a39-977b-cdd2a0b891c0
அடி (இடது), பினோ என இரண்டு மனிதக் குரங்குகள் சூரிய வெப்பத்தைத் தணிக்க குளிர்ந்த நீர் பீய்ச்சி அடிக்கப்படுவதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பார்ப்பதற்கு அடி என்ற மனிதக் குரங்கு நடனமாடுவதுபோல் தோன்றும்.

வானத்திலிருந்து சூரிய வெப்பம் தாக்க அந்த போர்னியோ பகுதியைச் சேர்ந்த மனிதக் குரங்கு தனது கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தி உடம்பு நெளிய நாட்டியமாடியது.

அதிசீக்கிரத்தில் ‘மழை’ பொழிந்தது. அதை தனது வாயைப் பிளந்தவாறே அடி வரவேற்றது.

இந்த நீர் வீழ்ச்சி வானத்திலிருந்து வரவில்லை, மாறாக, விலங்கியல் தோட்ட பராமரிப்பாளர்களின் நீர்க்குழாய்களிலிருந்து வந்தது.

எல் நினோ என்ற பருவநிலை மாற்றம் இனிவரும் காலங்களை மேலும் வெப்பம் அதிகமாகும் என்பதால் விலங்கியல் தோட்டம் அங்கிருக்கும் விலங்குகளை குளிர்விக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் அவற்றை குளிர்விக்க நீர்குழாய்கள் மூலம் குளிர்விக்கும் முயற்சி.

இந்தக் கோடை காலத்தில் விலங்குகளை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நல்ல நிலையில் வைத்திருக்க பனிக்கட்டியுடன் கூடிய உறைந்த பழ, காய்கறி வகை உணவும் அவற்றுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு கூறுகிறார் மண்டாய் விலங்கியல் தோட்டத்தில் உள்ள நான்கு பகுதிகளை நிர்வகிக்கும் விலங்கியல் குழுமத் துணைத் தலைவரான லுயிஸ் நெவேஸ்.

இவற்றுடன், விலங்குகளுக்கு போதிய அளவு குடிநீர் இருப்பதையும் தாங்கள் உறுதிசெய்வதாக அவர் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்