தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டபிள்யுடபிள்யுஇ நிகழ்ச்சியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த சிங்கப்பூரர்

1 mins read
b9ba1c55-f8dc-4fdd-9e8c-0cc68458c27b
டபிள்யுடபிள்யுஇ கேப்பிட்டல் மற்போர் மையத்தில் இந்தப் போட்டி நடந்தது. - படம்: டான்டே சென்/ஃபேஸ்புக்

ஒர்லாண்டோ: டான்டே சென் என்ற ரிங் பெயரில் மற்போர் செய்யும் தொழில்முறை மல்யுத்த வீரர் ஷான் டான், உலக மற்போர் பொழுதுபோக்கு (டபிள்யுடபிள்யுஇ) நிகழ்ச்சியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம், ஒர்லாண்டோவில் உள்ள டபிள்யுடபிள்யுஇ கேப்பிட்டல் மற்போர் மையத்தில் இந்தப் போட்டி நடந்தது.

வளர்ந்துவரும் நட்சத்திரமான ட்ரேக் மோர்ரியாக்ஸை டான் எதிர்கொண்டார்.

ஏப்ரல் 5ஆம் தேதி ஒளிபரப்பான இந்தப் போட்டியின்போது, மோர்ரியாக்ஸ் ஆரம்பத்தில் தமது பெரிய உடல் அளவைப் பயன்படுத்தி டானை ஆக்கிரமித்தார்.

இருப்பினும், டான் தனது எதிராளியை தரையில் புரட்டியதன் மூலம் மோரியாக்ஸை கட்டுப்படுத்த முடிந்தது.

தமது வெற்றிப் படங்களை டான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார்.

வெற்றி பெறுவதற்கு இது “சரியான வாரம்” என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டார்.

டபிள்யுடபிள்யுஇ உடன் ஒப்பந்தமான முதல் சிங்கப்பூரரும் தென்கிழக்காசிய மல்யுத்த வீரர் ஆவார் டான். அதைத் தொடர்ந்து, அவர் ஃபுளோரிடாவின் ஒர்லாண்டோவுக்கு இடம்பெயர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்