வெளிநாட்டினர் நிறுவனங்களைப் பதிவு செய்ய தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள்

1 mins read
a4ae85bf-4281-4dbe-885d-379859113ce7
நிறுவனங்களின் வருங்கால இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் பற்றிய தகவல்களைச் சரிபார்ப்பது போன்ற அம்சங்களில் வெவ்வேறு தரநிலைகள் நடப்பில் இருப்பதாக நிறுவனச் சேவை வழங்குநர்கள் கூறினர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் நிறுவனங்களைப் பதிவு செய்யும் வெளிநாட்டினருக்கு தெளிவான, வலுவான வழிகாட்டு நெறிமுறைகள் நடப்பில் இருப்பதாக அந்த நெறிமுறைகளை ஆதரிக்கும் நிறுவனச் சேவை வழங்குநர்கள் தெரிவித்து உள்ளனர்.

அந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப நிறுவனச் சேவை வழங்குநர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட முடிவு எடுத்துக்கொள்ளலாம் என அவற்றின் அமலாக்கம் குறிப்பிடுவதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.

நிறுவனங்களின் வருங்கால இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் பற்றிய தகவல்களைச் சரிபார்ப்பது போன்ற அம்சங்களில் வெவ்வேறு தரநிலைகள் நடப்பில் இருப்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தனர்.

சிங்கப்பூரர் ஒருவர் தமது அடையாள அட்டை உள்ளிட்ட சொந்த விவரங்கள் இங்கு நான்கு நிறுவனங்களைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்டனவா என்பது பற்றி தாம் அறிந்திருக்கவில்லை என்று கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தது.

அதனைத் தொடர்ந்து நிறுவனச் சேவை வழங்குநர்கள் தொடர்பான விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

அந்த நான்கு நிறுவனங்களும் நிறுவனச் சேவை வழங்குநர்கள் மூலமாக வெளிநாட்டினரால் தொடங்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்