தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்நுட்பக் கோளாறு: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஐந்து மணிநேரம் தாமதம்

1 mins read
b255d400-a720-454a-80fa-b78d45c323ad
பாதிக்கப்பட்ட பயணிகளிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து ஏப்ரல் 7ஆம் தேதியன்று புறப்பட்டுச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் அந்நகரத்தில் தரையிறங்கியது.

அப்போது அந்த விமானத்தில் 474 பயணிகளும் 27 விமானச் சிப்பந்திகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எஸ்கியூ 232ன் இறக்கைகள் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாகவும் அவை சரிசெய்யப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் கழித்து அந்த விமானம் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தது.

பாதிக்கப்பட்ட பயணிகளிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டதாக அது கூறியது.

குறிப்புச் சொற்கள்