போலி வெடிகுண்டு சம்பவம்: பாதுகாப்பு அதிகாரி மீது குற்றச்சாட்டு

போலி வெடிகுண்டு குறித்த சம்பவம் தொடர்பாக 46 வயது ஆடவர் மீது ஏப்ரல் 9ஆம் தேதி குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 5ஆம் தேதி காலை 8.22 மணிக்கு 32 அங் மோ கியோ தொழிற்பேட்டை 2ல் வெடிகுண்டு எனச் சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் அந்தப் பொருளைச் சோதனையிட்டனர்.

அது வெடிகுண்டு அல்ல என்றும் அப்பொருளால் பாதுகாப்பு மிரட்டல் ஏதும் இல்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

பாதுகாப்பு நிறுவனம் ஒன்று நடத்திய பாவனைப் பயிற்சிக்குப் பிறகு அந்தப் பொருள் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

ஜனவரி 5 அதிகாலை 4.30 மணி அளவில் அப்பொருளை அங்கிருந்து அகற்றும் பணி அந்தத் தொழிற்பேட்டையில் இரவு நேரப் பணியில் ஈடுபட்ட அந்த 46 வயது ஆடவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அந்தப் பொருளை அகற்ற அவர் மறந்துவிட்டார். ஜனவரி 5ஆம் தேதி அதிகாலை பாவனைப் பயிற்சி நடைபெற்றபோது பாதுகாப்பு அதிகாரிகளுக்கான அலுவலகத்தில் அவர் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு காலை நேரப் பணிக்காக வந்த இன்னொரு பாதுகாப்பு அதிகாரி அப்பொருளைப் பார்த்து வெடிகுண்டு என்று நினைத்து காவல்துறையிடம் புகார் செய்தார். பாவனைப் பயிற்சி நடைபெற்றது அவருக்குத் தெரியாது.

அவ்விடத்துக்கு அருகில் உள்ள கடையில் உணவு வாங்கச் சென்றதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஆடவர் காவல்துறையிடம் கூறினார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான அலுவலகத்தில் அவரை ஐந்து மணி நேரத்துக்கும் மேல் காணவில்லை என்று கண்காணிப்பு கேமராவில் தெரியவந்தது.

தாம் அங்கு இல்லாததை மறைக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கான நேரப் பதிவேட்டில் பொய்த் தகவல்களைப் பதிவிட்டதை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்தது.

பாவனைப் பயிற்சி சரியான முறையில் நிர்வகிக்கப்படாததால் காவல்துறை அதிகாரிகள் அவ்விடத்துக்கு விரைந்துச் செல்ல வேண்டி இருந்ததாகவும் பணியிடத்துக்குள் நுழைய முடியாமல் 100க்கும் மேற்பட்டோருக்கு அசௌகரியம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பதற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது, தகுந்த காரணங்கள் இன்றி வேலையிடத்தில் இருந்த பணிகளைக் கவனிக்காமல் வேறு இடத்துக்குச் சென்றது, அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் தெரிவித்தது, நேரப் பதிவேட்டில் பொய்ப் பதிவுகளைப் பதிவிட்டது ஆகியவற்றுக்காக அந்த ஆடவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!