சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விலகல்

சாங்கி விமானநிலையக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 15 ஆண்டு காலம் பணியாற்றிய லீ சியாவ் ஹியாங் ஜூலை 1ஆம் தேதி அந்தப் பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்தப் பொறுப்பை யாம் கம் வெங் ஏற்பார் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) தனது அறிக்கையில் குறிப்பிட்டது. திரு யாம், 59, தற்போது குழுமத்தின் விமான நிலைய மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவராக உள்ளார். சாங்கி ஈஸ்ட் புரொஜெக்ட் என்னும் திட்டத்தை அவர் வழிநடத்தி வருகிறார்.

சாங்கி விமான நிலைய அனைத்துலகப் பிரிவு, ஜுவல் சாங்கி விமான நிலைய மேம்பாட்டுப் பிரிவு ஆகியவற்றின் இயக்குநர் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்தும் திரு லீ, 54, விலக இருக்கிறார்.

இந்தப் பிரிவு சாங்கி விமான நிலையக் குழுமத்தின் முதலீடு மற்றும் ஆலோசனைப் பணியை மேற்கொள்கிறது.

சாங்கி விமான நிலையக் குழுமமும் கேப்பிட்டாலேண்ட் குழுமமும் இணைந்து நடத்தும் ஜுவல் சாங்கி விமான நிலைய மேம்பாட்டுப் பிரிவின் புதிய தலைவர் உரிய நேரத்தில் அறிவிக்கப்படுவார் என்று குழுமத்தின் பேச்சாளர் ஐவன் டான் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் கூறினார்.

கடந்த 2009 ஜூலை 1ஆம் தேதி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் பெற்ற திரு லீ விமான நிலையத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கண்டவர். குறிப்பாக, திரு லீயின் பதவிக் காலத்தில் 2017ஆம் ஆண்டு சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையமும் 2019ஆம் ஆண்டு ஜுவல் விமான நிலையமும் திறக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!