செந்தோசா கோவ்வில் விற்கப்படாத வீடுகளின் விலை பாதியாகக் குறைப்பு

‘ரெசிடன்சஸ் அட் டபிள்யூ செந்தோசா கோவ்’வில் உள்ள விற்கப்படாத சொகுசு வீடுகளின் விலை அவை 2010ல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இருந்த விலையிலிருந்து 40% கழித்து விற்கப்பட தயாராக உள்ளன.

228 சொகுசு வீடுகள் உள்ள கூட்டுரிமை அடுக்குமாடித் தொகுதி சிட்டி டெவலப்மண்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிட்டிவியூ பிளேஸ் ஹோல்டிங்சால் கட்டப்பட்டது. அது அத்தொகுதியில் இன்னும் விற்கப்படாத 58 வீடுகளை ஏப்ரல் 15ஆம் தேதி விற்பனைக்கு விடுகிறது. அதன் தொடக்க விலை ஒரு சதுர அடிக்கு $1,648 முதல் தொடங்குகிறது.

“இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகள் சலுகை விலையில் விற்கப்படுகின்றன. செந்தோசா கோவ்வில் உள்ள சொத்துகளில் அண்மைய காலங்களில் ஆர்வமும் விற்பனை நடவடிக்கையும் அதிகரித்து வருகிறது,” என்று சிட்டிவியூ நிறுவனப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

கடந்த வாரம் மட்டும் அந்த வீடுகளின் விலை பற்றியும் பரப்பளவு பற்றியும் உத்தேச வாங்குபவர்களிடம் சொத்து முகவர்கள் பேசி வருவதையும் வீடுகளை நேரடியாக ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காட்டுவதற்கு முகவர்கள் அழைப்பு விடுக்கிறார்கள்.

டபிள்யூ ஹோட்டலின் ஒரு பகுதியான இந்த 99 ஆண்டு குத்தகையுள்ள குடியிருப்பு, 2010ல் சொத்து விற்பனை உச்சத்தில் இருந்தபோது முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இரண்டு முதல் நான்கு படுக்கையறைகளைக் கொண்ட, 1,227 சதுர அடி முதல் 6,297 சதுர அடி கொண்ட வீடுகளுக்கும் ‘பென்ட்ஹவுஸ்’ அதிசொகுசு வீடுகளுக்கும் ஒரு சதுர அடிக்கு $2,500 முதல் $3,000 என்று விலை நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், 2010லிருந்து தொடர்ந்து சொத்துத் தணிப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், செந்தோசாவில் உள்ள கூட்டுரிமை வீடுகளின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்தக் கட்டுமானத் திட்டம் 2011ல் நிறைவுபெற்றவுடன், வாங்குவோருக்கான கூடுதல் முத்திரை வரி அறிமுகமாகி, சொத்துத் தணிப்பு நடவடிக்கை மேலும் கடுமையாக்கப்பட்டது.

2012 முதல் 2023 வரை ஐந்து வீடுகள் மட்டுமே மறுவிற்பனை செய்யப்பட்டன என்று நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தரவு காட்டியது.

ஓய்வுத்தள வாழ்க்கைபாணி அமைப்பிலான இந்த வீடுகள் பெரும் பணக்காரர்களை மையமாகக் கொண்டு கட்டப்பட்டன. 2010ல் இருந்த விலை 40% சரிந்து 2020ல் ஒரு சதுர அடிக்கு $1,394 என்று குறைந்தது.

சொகுசு சொத்துச் சந்தையில் குறைவான வீடுகளே கைமாறும் இக்காலகட்டத்தில் ‘ரெசிடன்சஸ் அட் டபிள்யூ செந்தோசா கோவ்’வில் உள்ள விற்கப்படாத சொகுசு வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன என்று சந்தை கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

“செந்தோசாவில் உள்ள கூட்டுரிமை வீடுகளின் சராசரி விலைகள் தற்போது ஒரு சதுர அடிக்கு $2,000 என்று உள்ளது. இது கொவிட் பெருந்தொற்று காலத்துக்கு முன்பிருந்த விலையை விட அதிகம். ஒட்டுமொத்த வாடகைச் சந்தையில் அடிப்படையில் செந்தோசா குடியிருப்புகளின் வாடகை வீடுகளின் விகிதங்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று மோகுல்.எஸ்ஜி சொத்துத் தளத்தின் தலைமை ஆய்வு அதிகாரி திரு நிக்கலஸ் மாக் தெரிவித்தார்.

“வாடகை பணப்புழக்கத்தைப் பொறுத்து முதலீட்டுத் தளம் அமையும் என்பதாலும் வரும் ஆண்டில் அது மெதுவடையும் என்பதாலும், அந்த வீடுகளை விற்க இதுவே நல்ல தருணம்,” என்றும் திரு மாக் மேலும் சொன்னார்.

புதிய வீடுகளும் விற்பனைக்கு விடப்படுவதால், அது செந்தோசா கோவ் துணை சொத்துச் சந்தையில் உற்சாகத்தை அதிகரிக்கும் என்று திரு மாக் நம்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!