தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரந்தூக்கி விழுந்ததில் வேன் நொறுங்கியது

1 mins read
9ac1baff-170d-4867-8453-068e51380f8a
கனரக வாகனம் மீது அந்தப் பாரந்தூக்கி ஏற்றப்பட்டபோது அது வேன் மீது விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4

செங்காங் வட்டாரத்தில் கட்டுமானப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பாரந்தூக்கி ஒன்று விழுந்ததில் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த வேன் நொறுங்கியது.

இந்தச் சம்பவம் ஏப்ரல் 9ஆம் தேதி மாலை காம்பஸ்வேல் ஸ்திரீட் சாலைச் சந்திப்புக்கு அருகில் உள்ள பொங்கோல் சாலையில் நிகழ்ந்தது.

விபத்து குறித்து மாலை 4.55 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நொறுங்கிய வேனிலிருந்து அதன் ஓட்டுநர் வெளிவந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக அவருக்குக் காயம் ஏற்படவில்லை என்றும் அவ்வட்டாரத்தில் வசிக்கும் 60 வயது திரு லிம் கூறினார்.

கனரக வாகனம் ஒன்றின் மீது அந்தப் பாரந்தோக்கி ஏற்றப்பட்டபோது அது விழுந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். பாரந்தூக்கி விழுந்தபோது அதில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்து