பறவைக் கடத்தல்காரர்களை கையும் களவுமாகப் பிடித்த அதிகாரிகள்

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி அதிகாலை துவாஸ் சோதனைச்சாவடியை மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கனரக வாகனம் ஒன்று அடைந்தது.

அதைச் சோதனையிட்டபோது ஓட்டுநர் மற்றும் பயணிகளின் இருக்கைகளுக்குப் பின்னால் 337 பறவைகள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர்.

அந்தக் கனரக வாகனத்தின் ஓட்டுநரான 27 வயது ஐஸுதீன் ஹாடி முகம்மது இஷாக் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவரை விசாரணைக் காவலில் தடுத்து வைப்பதற்குப் பதிலாக சிங்கப்பூருக்குள் அந்த வாகனத்தை ஓட்டிச் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.

இந்தக் கடத்தலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டது.

வாகனம் துவாஸ் லிங்க்கை அடைந்தபோது 60 வயது இங் லியாங் ஹுவாட், ஹாடிக்காக அங்கு காத்திருந்தார். பறவைகளை சிங்கப்பூருக்குள் கடத்திக் கொண்டு வந்ததற்காக ஹாடியிடம் $900 கொடுக்க அவர் திட்டமிட்டிருந்ததாக அறியப்படுகிறது.

அதிகாரிகள் இங்கைக் கைது செய்தனர்.

இந்தப் பறவைக் கடத்தலுக்குச் செல்லப் பிராணிகள் கடை உரிமையாளரான 62 வயது லியாவ் செங் லீ காரணமானவர் என்று தெரியவந்தது.

அதிகாரிகளின் உத்தரவின்படி பிற்பகல் 3 மணி அளவில் லியாவ்வின் கடைக்குச் சில பறவைகளை இங் கொண்டு சென்றார். அக்கடை புளோக் 26 டெக் வாய் லேனில் உள்ளது.

பறவைகளை லியாவ் இங்கிடமிருந்து பெற்றுக்கொண்டபோது அவர் கைது செய்யப்பட்டார்.

ஏப்ரல் 2ஆம் தேதியன்று லியோவுக்கு 68 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக இங்கிற்கும் ஹாடிக்கும் முறையே 72 வார, 60 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூருக்குள் மொத்தம் 337 பறவைகள் கடத்தப்பட்டன.

அவற்றில் 237 பறவைகள் லியாவ் சொல்லி சிங்கப்பூருக்குள் கொண்டுவரப்பட்டன.

ஏனைய 100 பறவைகள் வேறொருவருக்காகக் கொண்டு வரப்பட்டன.

அவரது பெயர் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

கடத்தப்பட்ட பறவைகளில் அருகி வரும் வகையைச் சேர்ந்த பறவைகளும் அடங்கும்.

சிங்கப்பூருக்குள் கடத்திக் கொண்டுவரப்பட்ட அந்த 337 பறவைகளில் 138 பறவைகள் மடிந்ததாக ஏப்ரல் 9ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.

சிங்கப்பூரில் பதிவாகி உள்ள மிகப் பெரிய பறவைக் கடத்தல்களில் இதுவும் ஒன்று என்று வாரியம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!