இணைய வர்த்தக பாதுகாப்பு குறியீடு: அமேசான், லஸாடா, Qoo10 முதலிடம்

இணைய வர்த்தக பாதுகாப்பு குறியீடு: அமேசான், லஸாடா, Qoo10 முதலிடம்

1 mins read
11c68ce0-252a-4694-afb8-667609ac6aab
ஷாப்பி, அமேசான், லஸாடா, Qoo10 உள்ளிட்ட ஆறு முக்கிய இணைய வர்த்தக தளங்களின் பாதுகாப்பு அம்சங்கள் சோதிக்கப்பட்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணையச் சந்தை வர்த்தக பாதுகாப்பு தரநிலை குறியீடுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் ஷாப்பி, அமேசான், லஸாடா, Qoo10 ஆகிய நான்கு தளங்களும் முழு மதிப்பீடான நான்கு குறியீடுகளைப் பெற்று தங்களின் பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்துள்ளன.

அதேவேளையில், ஃபேஸ்புக் ஒரே ஒரு குறியீட்டுடன் பட்டியலில் ஆகக் கடைசியில் இருக்கிறது. கேரோசல் இரண்டு குறியீடுகளைப் பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் இணைய மோசடிகளைத் தடுப்பதற்காக பல அமைச்சுகளை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழு 2024ஆம் ஆண்டுக்கான இணையச் சந்தை வர்த்தக பாதுகாப்புத் தரவரிசை பட்டியலை புதன்கிழமை அன்று வெளியிட்டது.

மக்களை மோசடிகளில் இருந்து பாதுகாக்க இணைய விற்பனைத் தளங்கள் எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கின்றன என்ற அடிப்படையில் இந்தத் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆறு முக்கிய இணைய வர்த்தக தளங்களின் மோசடி பாதுகாப்பு அம்சங்கள் சோதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஷாப்பியில் புகாரளிக்கப்பட்ட இணைய வர்த்தக மோசடிகளின் எண்ணிக்கை 65 விழுக்காடு குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு 311 ஆக இருந்த மோசடி புகார்களின் எண்ணிக்கை  கடந்த ஆண்டு 109 ஆக சரிந்தது.

அதே வேளையில், ஃபேஸ்புக்கில் புகாரளிக்கப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டு 1,138 ஆக இருந்த புகார்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 4,550 ஆக உயர்ந்தன.

கடந்த ஆண்டு இணைய வர்த்தக மோசடிகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் $13.9 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
இணையப் பாதுகாப்புகுறியீடுஃபேஸ்புக்