மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக மருத்துவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக மருத்துவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
0cba890f-1c16-4b5c-9bb9-1c7315e6f964
2023ஆம் ஆண்டில் மது அருந்திவிட்டு வாகனமோட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் 180 என்று வருடாந்திர புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாக 55 வயது கென்னத் வோங் ஹோன் குவோங் என்பவர் மீது ஏப்ரல் 11ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

வாகனம் விபத்துக்குள்ளானதுடன் நால்வருக்குக் காயமும் விளைவித்த அவர், ஒரு மருத்துவர் என்று அறியப்படுகிறது.

வோங் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி பின்னிரவு 1 மணியளவில் அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாக் கூறப்படுகிறது.

போக்குவரத்து விளக்கு சிவப்பாக இருந்தும் அதை மீறி வோங் வாகனத்தைச் செலுத்தியதை அடுத்து இன்னொரு காருடனும் டாக்சியுடனும் வாகனம் மோதியதாக நம்பப்படுகிறது.

விபத்தில் 38 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர் காயமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்