தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலக்கெடுவை நீட்டிக்க கார்ட்லைஃப் கோரிக்கை

1 mins read
ஆண்டுப் பொதுக்கூட்டம், நீடித்த நிலைத்தன்மை அறிக்கை ஆகியவை தொடர்பில் சிங்கப்பூர் பங்குச்சந்தையிடம் வேண்டுகோள்
cca3c0eb-75b7-4971-9529-0831de795c7a
சேமிக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தம் பாழானது தொடர்பில் கார்ட்லைஃப் நிறுவனத்திடம் சுகாதார அமைச்சு விசாரணை மேற்கொள்கிறது. - படம்: கார்ட்லைஃப்

தொப்புள்கொடி ரத்தச் சேமிப்பு வங்கியான ‘கார்ட்லைஃப்’, அதன் ஆண்டுப் பொதுக்கூட்டம், நீடித்த நிலைத்தன்மை அறிக்கை ஆகியவற்றுக்கான காலக்கெடுவை நீட்டிக்கும்படி சிங்கப்பூர் பங்குச்சந்தையிடம் கோரியுள்ளது.

ஏப்ரல் 9ஆம் தேதி அது அவ்வாறு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் விசாரணை தொடர்வதால், இறுதி அறிக்கையை வெளியிடவும் ஆண்டுப் பொதுக்கூட்டத்தை நடத்தவும் கூடுதல் அவகாசம் தேவை என்று கார்ட்லைஃப் குறிப்பிட்டது.

விதிமுறைகளின்கீழ், ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆண்டுப் பொதுக்கூட்டத்தை நடத்துவதும் நிதியாண்டின் முடிவிலிருந்து நான்கு மாதங்களுக்குள் நீடித்த நிலைத்தன்மை அறிக்கையைச் சமர்ப்பிப்பதும் கட்டாயம் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்