பாட்டாளிக் கட்சியிலிருந்து விலகிய டெரன்ஸ் டான்

குடும்ப வாழ்க்கை, தொழில் ஆகியவற்றில் கவனம் செலுத்த பாட்டாளிக் கட்சியிலிருந்து விலகியுள்ளார் டெரன்ஸ் டான்.

இவர் பாட்டாளிக் கட்சி சார்பாக பொதுத் தேர்தலில் இருமுறை போட்டியிட்டவர்.

2015ஆம் ஆண்டில் மரின் பரேட் குழுத் தொகுதியிலும் 2020ஆம் ஆண்டில் ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியிலும் அவர் களமிறங்கி தோற்றார்.

53 வயது திரு டான், செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ருவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதத்தில் பாட்டாளிக் கட்சியிலிருந்து விலகியதாகவும் கட்சித் தலைவர்கள் புரிந்துணர்வுடன் அதை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

திரு டானுக்கும் அவரது மனைவிக்கும் மூன்று மகன்கள் உள்ளனர். மூவரும் ஏழு வயதுக்கும் குறைவானவர்கள்.

“எனது மனைவிக்கு ஆதரவு வழங்கவும் பிள்ளைகளுடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் தொழிலை மேம்படுத்தவும் கட்சியிலிருந்து விலகியுள்ளேன்,” என்றார் திரு டான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!