நேற்று ரயில், நாளை ஹோட்டல்

பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட பேருந்துகள் புதுப்பொலிவு பெற்றதை அடுத்து இனி எஸ்எம்ஆர்டி ரயில்களும் புத்துயிர் பெறவுள்ளன.

சிங்கப்பூரின் முதல் இணைந்து வாழும் ரயில் ஹோட்டல், இந்த ‘டிரெயின் போட் @ஒன் நார்த்’ திட்டம்.

உள்ளூர் புது நிறுவனமான ‘டைனி போட்’, ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் ஆதரவுடன் இத்திட்டத்தை செப்டம்பர் மாதம் துவக்கிவைக்க உள்ளது.

இணைந்து வாழும் இத்தகைய ஹோட்டல் வளாகத்தில் அறைகலன்கள் உள்ள அறை வசதிகளை மக்கள் பயன்படுத்தித் திளைப்பதுடன் சமூக இடங்களில் மற்றவர்களுடன் உறவாடவும் முடியும்.

புளோக் 69 அயர் ராஜா கிரசண்ட் அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் 7.5 சதுர மீட்டர் அளவிலான எட்டு அறைகளை இந்த ரயில் பெட்டி கொண்டிருக்கும். ஒவ்வோர் அறையுடன் ஒரு கழிவறையும் இணைக்கப்பட்டிருக்கும்.

அறிவார்ந்த பூட்டு அமைப்புமுறையை இந்த ஹோட்டல் கொண்டிருக்கும்.

இந்த ரயில் ஹோட்டலில் பணியாளர்கள் நேரடியாக நிறுத்தப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால், மீண்டும் அறையை ஒப்படைக்கும்போது துப்புரவுக் குழு அங்கு இருக்கும்.

இணைந்து வாழும் முதல் ஹோட்டல் திட்டமாக சிங்கப்பூரில் உருவாகி வருகிறது ‘ட்ரெயின் போட்@ஒன்-நார்த்’. படம்: டைனி போட்

பொதுமக்களுக்குப் பசுமை நிறைந்த உல்லாச இடம் ஒன்றும் ரயில் ஹோட்டல் அருகே உருவாக்கப்படும். இங்கு உணவு பானத்துக்கான விற்பனை இயந்திரங்களும் மிதிவண்டிச் சட்டங்களும் இருக்கும்.

ரயில் இருக்கைகள் மறுவடிவமைக்கப்பட்டு ஓய்வெடுக்கக்கூடிய வெளிப்புறப் பொது இருக்கைகளாகும்.

இத்திட்டத்துக்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்கிவிட்டன. ஆனால், அறைக்கான வாடகை, முன்பதிவுக்கான தேதி போன்ற விவரங்கள் இன்னும் உறுதியாகவில்லை என்று ‘டைனி போட்’ நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சியா லியாங் சியாங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!