ஈரானுக்குச் செல்வதை ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்குச் செல்வதை ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தல்

1 mins read
9e901a2e-1364-4baf-bba8-bee40d2ddf74
ஈரானுக்குச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டால் வெளியுறவு அமைச்சுடன் பதிவு செய்துகொள்ளும்படி சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈரானுக்குச் செல்வதை ஒத்திவைக்குமாறு அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்த அறிக்கையை ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியுறவு அமைச்சு வெளியிட்டது.

ஈரானுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்‌ரேல் சூளுரைத்துள்ளது.

“ஈரானுடன் சிங்கப்பூருக்கு அரசதந்திர உறவு இல்லை. அங்கு சிங்கப்பூர் தூதரகம் இல்லாததால் அவசரநிலை ஏற்பட்டால் உதவி வழங்குவது சவால்மிக்கதாக இருக்கும்,” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

ஈரானுக்குச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டால் வெளியுறவு அமைச்சுடன் பதிவு செய்துகொள்ளும்படி சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.

ஈரானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு உதவி தேவைப்பட்டால் +65 63798800/8855 எனும் தொலைபேசி எண் மூலம் வெளியுறவு அமைச்சைத் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அல்லது mfa_duty_officer@mfa.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்