சிங்கப்பூருக்கு நியூசிலாந்து பிரதமர் அதிகாரபூர்வ பயணம்

சிங்கப்பூருக்கு நியூசிலாந்து பிரதமர் அதிகாரபூர்வ பயணம்

1 mins read
54486594-09d2-4d16-8696-fe0ae4d06258
இவ்வாண்டு மார்ச் 5ஆம் தேதி மெல்பர்ன் நகரிரல் நடைபெற்ற ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டின் இடைவேளையில் பிரதமர் லீ சியன் லூங்கும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சனும் சந்தித்துக்கொண்டனர் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் ஏப்ரல் 14லிருந்து 16ஆம் தேதிவரை சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார்.

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றபின் சிங்கப்பூர் வருவது இதுவே முதல் முறை. அவருக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 15) அன்று அதிபர் மாளிகை இஸ்தானாவில் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். அத்துடன், புதிய ஆர்க்கிட் மலர் ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்படும்.I

இது குறித்து அறிக்கை வெளியிட்ட வெளியுறவு அமைச்சு, திரு லக்சன் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு பிரதமர் லீ சியன் லூங் மதிய உணவு விருந்தளிப்பார் என்று தெரிவித்தது.

சிங்கப்பூருக்கு வரும் நியூசிலாந்து பிரதமர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் சநதிப்பார்.

திரு லக்சனுடன் சிங்கப்பூருக்கு நியூசிலாந்தின் பருவநிலை, நிதித்துறை அமைச்சருமான திரு சைமன் வாட்ஸ் மற்ற மூத்த அதிகாரிகளும் வருகையளிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நியூசிலாந்து பிரதமர் லக்சனின் வரவு 2019ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட பங்காளித்துவ உறவின் பின்னணியில் அமைவதுடன் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் உன்னதமான நீண்டகால உறவுகளை மறுஉறுதிப்படுத்துகிறது,” என்று வெளியுறவு அமைச்சின் அறிக்கை விளக்கியது.

குறிப்புச் சொற்கள்