சிறப்பு தேவையுடைய பிள்ளைகள்; பெற்றோர் தவிப்பு

ஏறுமாறான சிகிச்சை முறைகள்

இல்லத்தரசி சஃபிரா ஓஷின், 33, 2018ஆம் ஆண்டு மதியிறுக்க நோயால் அவதிப்படும் தமது ஐந்து வயது மகனுக்கு உதவும் வகையாக வீட்டிலிருந்தபடியே நோய்க்கு சிகிச்சையளிக்கக்கூடிய செயல்முறை சிகிச்சை நிபுணரை அமர்த்தினார்.

ஆனால் அதுவே அவருக்கு தீராத மனவலியைத் தமது குடும்பத்துக்குத் தரும் என அப்போது அவர் நினைக்கவில்லை.

தனியார் சிகிச்சை நிலையத்தில் இருந்து வந்த அந்த சிகிச்சை நிபுணர் மதியிறுக்கத்தாலும் ‘அட்டென்ஷன் டெவிசிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி’ எனப்படும் அதீத சுறுசுறுப்புத் தன்மையால் ஏற்படும் கவனக் குறைவை நீக்கி திருவாட்டி சஃபிராவின் மகனை சரிசெய்வதற்காக அந்த நிபுணர் பணியமர்த்தப்பட்டார்.

நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் தமது மகனிடம் சில ஆக்கபூர்வமான மாறுதல்களை திருவாட்டி சஃபிரா கண்டார். அவர் இருந்த இடத்தில் அமர்ந்தபடியே தமது பணிகளை கவனித்துக் கொண்டு தனது தேவைகளை உணர்த்தக் கற்றுக்கொண்டார்.

ஆனால், ஒரு நாள் அலி தமது சிகிச்சை நேரத்தில் கண்ணீருடன் அங்கிருந்து ஓடி வேறொரு அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டதாக திருவாட்டி சஃபிரா கூறுகிறார். தமது வீட்டில் இருக்கும் சிசிடிவி பதிவுகளைக் கண்டபோது சிகிச்சையளிப்பவர் தமது மகனின் கழுத்தைப் பிடித்து அவரை பலவந்தமாக நடத்தினார்.

சிகிச்சை நிபுணரை பணியில் அமர்த்தியத் தனியார் சிகிச்சை நிலையம் அவரை பணிநீக்கம் செய்தது. திருவாட்டி சஃபிராவும் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால், அவரது மகனின் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததாலும் அவரது மகனால் தமது அனுபவத்தை வாய்மொழியால் கூற முடியாததாலும் அதற்குமேல் திருவாட்டி சஃபிராவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

திருவாட்டி சஃபிரா போல் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர், மானியத்துடன்கூடிய அரசு உதவியை எதிர்பார்த்து நீண்டநாள் காத்திருக்க வேண்டியதால், அவர்கள் தனியார் துறை சிகிச்சையை நாடுகின்றனர்.

இதன் தொடர்பில் கருத்துரைக்கும் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் இதுபோன்றவர்களுக்கு கூடுதல் ஆதரவு, சிகிச்சையில் தரநிலை போன்றவை தேவைப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதில் தேசிய அளவில் தரநிலை நிர்ணயிக்கப்படாததால், வெவ்வேறு சிகிச்சை நிபுணர்களிடையே ஏறுமாறான தரநிலைகள் நிலவுவதாக இவர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!