தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈசூன் பேருந்து நிலையத்தில் சுவர் மீது பேருந்து மோதியது

1 mins read
011fddcd-527e-48b6-b35b-cf8eb5259f77
விபத்தில் பேருந்தின் முன்பகுதி சேதமுற்றது. பேருந்திலிருந்து அதன் முன்கண்ணாடி அகன்றது. - படம்: Singapore roads accident.com/ஃபேஸ்புக்

ஈசூன் பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று சுவர் மீது மோதிய சம்பவம் குறித்து பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட் விசாரணை நடத்தி வருகிறது.

ஏப்ரல் 11ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தின் படங்கள் அதற்கு அடுத்த நாள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதில் பேருந்தின் முன்பகுதி சேதமுற்றது. பேருந்திலிருந்து அதன் முன்கண்ணாடி அகன்றது. அதன் கண்ணாடித் துகள்கள் தரையில் சிதறிக் கிடந்தன.

அப்பேருந்தின் உள்புறம் இருளாக இருந்தது. அதன் முன்பகுதிக் கதவுகள் திறந்திருந்தன.

மதர்ஷிப் தளத்திடம் பேசிய எஸ்பிஎஸ் டிரான்சிட் பேச்சாளர் கிரேஸ் வூ, சம்பவம் நிகழ்ந்தபோது அந்தப் பேருந்து சேவையில் இல்லை என்று கூறினார்.

பேருந்து நிலையத்துக்குத் திரும்பிக்கொண்டு இருந்தபோது சுவர் மீது அப்பேருந்து மோதியது.

குறிப்புச் சொற்கள்