தன்முனைப்பு சொற்பொழிவு: ‘ஆற்றல் வளர்க்க விரும்பு’

தன்முனைப்பு சொற்பொழிவு: ‘ஆற்றல் வளர்க்க விரும்பு’

1 mins read
b1f99988-09aa-47a0-bb67-af6fae556131
நிகழ்ச்சியில் முனைவர் வெ.இறையன்பு சிறப்புரை ஆற்றுகிறார். - படம்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக சனிக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதியன்று, ‘ஆற்றல் வளர்க்க விரும்பு’ எனும் தலைப்பில் தன்முனைப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வு மெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

தமஇழகத்தின் முனைவர் வெ.இறையன்பு நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்கிறார்.

இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்த முனைவர் இறையன்பு, சுமார் 1,000 வானொலி நிகழ்ச்சிகள், 1,500 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 2,000 சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் உரையாற்றிய ஆற்றல்மிகு பேச்சாளர் ஆவார்.

தமிழ்மொழி விழாவின் ‘ஆற்றல்’ கருப்பொருளையொட்டி இந்நிகழ்ச்சி வடிவமைக்‌கப்பட்டுள்ளது.

ஆற்றலை வளர்க்க விரும்பும் மாணவர்கள், இளையர்கள், பெற்றோர், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அன்புடன் அழைக்கிறது. அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்