தமிழ்மொழி விழா சிறப்புப் பட்டிமன்றம்

தமிழ்மொழி விழா சிறப்புப் பட்டிமன்றம்

1 mins read
3d1817ad-4ae9-4cc6-8ee0-fd4cff5bd279
படம்: - தமிழ் முரசு

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் சார்பில் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், ஏப்ரல் 20ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு சுவா சூ காங்கிலிருக்கும் கியட்ஹாங் சமூக மன்றத்தின் 5ஆம் தளத்தில் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில், சிறப்புப் பேச்சாளர்கள் புலவர் இராமலிங்கம் மற்றும் திருமதி கவிதா ஜவஹர் ஆகியோருடன் உள்ளூர் பேச்சாளர்கள் திரு இராம்குமார் சந்தானம், திருமதி நபிலா நஸ்ரின், மாணவி முத்துக்குமார் மகிஷா, மாணவன் மணி கவிராஜ் ஆகியோரும் பேசுகிறார்கள்.

நிகழ்ச்சிக்கான $8 நுழைவுச்சீட்டுகளை கியட் ஹாங் சமூக மன்றத்திலோ, முனைவர் ராம் 83321430, திரு சரவணன் 97844478 ஆகியோரிடமோ பெற்றுக்கொள்ளலாம்.

செய்தி: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

குறிப்புச் சொற்கள்