தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போப் பிரான்சிஸ் வருகை தொடர்பான மோசடியில் சிக்காமல் இருக்க அறிவுறுத்தல்

1 mins read
bdd61242-a57f-4edb-8928-2f3697afd689
போப் பிரான்சிஸ் வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி சிங்கப்பூருக்கு வருகிறார். - படம்: ஏஎஃப்பி

போப் பிரான்சிஸ் வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி சிங்கப்பூருக்கு வருகிறார். அவர் செப்டம்பர் 13ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது வருகையை குறிவைத்து மோசடிக்காரர்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

பொதுமக்கள் மோசடியில் சிக்காமல் இருக்க சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க சபை அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இணையத்தில் போப் பிரான்சிஸ் நடத்தும் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுவதாக மோசடிகள் நடக்கின்றன. இதன்மூலம் மோசடிக்காரர்கள் தனிநபர் தகவல்களை வாங்கிக்கொண்டு மேலும் பல மோசடிகளில் ஈடுபடக்கூடும் என்று ரோமன் கத்தோலிக்க சபை எச்சரித்துள்ளது.

போப் பிரான்சிஸ் வருகை குறித்த அதிகாரபூர்வ தகவல்களை www.popefrancis2024.sg, www.catholic.sg, www.mycatholic.sg உள்ளிட்ட இணையப் பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம் என்று சபை கூறியது.

பிரார்த்தனைக் கூட்டம் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அதற்கான நுழைவுச்சீட்டுகள் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் போப் பிரான்சிஸ் 12 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் இந்தோனீசியாவுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி செல்கிறார். அதன் பின்னர் பாப்புவா நியூ கினி, திமோர் லெஸ்டே நாடுகளுக்கு செல்வார்.

காலஞ்சென்ற இரண்டாம் போப் ஜான் பால் 1986ல் கடைசியாக சிங்கப்பூருக்கு வந்தபோது அவரைக் காண ஆயிரக்கணக்கான ரோமன் கத்தோலிக்கர்கள் திரண்டனர்.

குறிப்புச் சொற்கள்