தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தம்மைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர்களை நியமித்துள்ள பிரித்தம் சிங்

1 mins read
9ff736c7-ff71-4a23-a8eb-4b3dcbf89da9
எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரயீசா கான் தொடர்பான வழக்கு சம்பந்தமாக நாடாளுமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் பொய் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீது அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டது.

இதுதொடர்பாக திரு சிங் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரு சிங் மறுத்துள்ளார்.

இந்நிலையில், வழக்கு விசாரணையில் தம்மைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர்களை அவர் நியமித்துள்ளார்.

வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் ஏப்ரல் 17ஆம் தேதி காலை நடைபெற்றது.

திரு சிங்கைப் பிரதிநிதித்து வழக்கறிஞர்களான திரு ஆண்ட்ரே டேரியஸ் ஜுமபோய், திரு ஆரிஸ்டோட்டல் இமானுவல் எங் செங் யாங் ஆகியோர் வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

திரு சிங் இதில் கலந்துகொள்ளவில்லை.

வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடலுக்கு நீதிபதி சீ மின் பிங் தலைமை தாங்கினார்.

குறிப்புச் சொற்கள்