தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செஸ்ட்னட் இயற்கைப் பூங்காவில் மரம் விழுந்து காரை நசுக்கியது

1 mins read
4eec0f7a-7c68-4c05-b702-2599cbff051b
சம்பவம் பதிவான காணொளியிலிருந்து ஒரு காட்சி. - காணொளிப் படம்: எஸ்ஜி ரோட் விஜிலான்டே / ஃபேஸ்புக்

செஸ்ட்னட் அவென்யூவில் பெரிய மரம் ஒன்று விழுந்து காரை நசுக்கியது.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 13) நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட வெள்ளி ‘சிடான்’ காருக்குள் இருந்த கேமராவில் பதிவான காணொளியில் அதன் முற்பகுதியும் மேல்பகுதியும் நசுங்கியது தெரிந்தது.

Watch on YouTube

‘எஸ்ஜி ரோட் விஜிலான்டே’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தக் காணொளி 60,000 முறைக்கும் மேல் காணப்பட்டிருக்கிறது. சம்பவம் நிகழ்ந்தபோது காரில் யாரும் இல்லை.

சனிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் சம்பந்தப்பட்ட அல்பிஸியா மரத்தின் உடற்பகுதி உடைந்ததாக தேசிய பூங்காக் கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் அன்றைய தினம் இரவு 7.30 மணிக்குள் சிதைவுகள் அகற்ப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அல்பிஸியா மரம் விழுவது இது முதல்முறையன்று. 2016ஆம் ஆண்டில் புக்கிட் திமாவில் உள்ள ஒரு பங்ளா மீது ஓர் அல்பிஸியா மரம் விழுந்தது. அந்த பங்ளா, பேமலா ஹிக்லி எனும் 94 மாதுக்குச் சொந்தமாக இருந்தது. அவர், சிங்கப்பூரின் கடைசி பிரிட்டி‌ஷ் ஆளுநரின் தனிச் செயலாளராகப் பணியாற்றியவர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்