சண்டை, திருட்டு, தொல்லை: ஆடவருக்குச் சிறை, அபராதம்

சண்டை, திருட்டு, தொல்லை: ஆடவருக்குச் சிறை, அபராதம்

1 mins read
c175d2db-3e2a-4bd6-98e7-90a6f191aacb
அபராதத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தினால் அதற்குப் பதிலாக முகம்மது ஹஃபீஸ் அயூப்பிற்குக் கூடுதலாக மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சண்டை போட்டதற்காகவும் திருடியதற்காகவும் பொது இடத்தில் தொல்லை விளைவித்ததற்காகவும் 30 வயது முகம்மது ஹஃபீஸ் அயூப்பிற்கு ஏப்ரல் 16ஆம் தேதியன்று ஆறு வாரச் சிறையும் $2,800 அபராதமும் விதிக்கப்பட்டன.

இந்த குற்றங்கள் அனைத்தையும் அவர் 2023ஆம் ஆண்டில் ஐந்து மாதங்களுக்குள் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தீர்ப்பையடுத்து, தம்மிடம் 71 காசு மட்டுமே இருக்கிறது என்றும் அபராதத் தொகையைச் செலுத்த முடியாது என்றும் ஹஃபீஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அபராதம் செலுத்த முடியாத காரணத்தினால் அதற்குப் பதிலாக அவருக்குக் கூடுதலாக மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2021ஆம் ஆண்டில் திருட்டுக் குற்றத்துக்காக அவருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே ஆண்டில் பொது இடத்தில் தொல்லை விளைவித்த குற்றத்துக்காக அவருக்கு $400 அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்