ஸ்பெயினுக்குத் தனியாகச் சென்ற சிங்கப்பூரர் தொடர்பில் இல்லை

ஸ்பெயினுக்குத் தனியாகச் சென்ற சிங்கப்பூரர் தொடர்பில் இல்லை

1 mins read
ed6eb745-55ad-45cd-81af-3b3fba947f99
கட்டடக் கலை நிபுணரான ஆட்ரி ஃபாங் டிரு, 39, என்பவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. - படம்: ஆட்ரி/ஃபேஸ்புக்

ஸ்பெயினின் ஸாபியா பகுதிக்குத் தனியாக பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் மாது ஒருவரை ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து தொடர்புகொள்ள முடியவில்லை.

கட்டடக் கலை நிபுணரான ஆட்ரி ஃபாங் டிரு, 39, ஏப்ரல் 4ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டார். ஏப்ரல் 12ஆம் தேதி அவர் சிங்கப்பூர் திரும்ப வேண்டியது.

ஹோட்டலின் கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சிப்படி, ஏப்ரல் 9ஆம் தேதி உள்ளூர் நேரப்படி இரவு 8.45 மணிக்கு கடைசியாக ஃபாங் காணப்பட்டதாக அவருடைய குடும்ப நண்பர் லீ சி ஹுவி, 30, கூறினார்.

ஏப்ரல் 11ஆம் தேதி ஃபாங்கின் குடும்பத்தார் வெளியுறவு அமைச்சில் புகார் அளித்தனர்.

ஃபாங்கை வரவேற்க சாங்கி விமான நிலையத்தில் காத்திருந்த அவருடைய சகோதரர், ஏப்ரல் 12ஆம் தேதி ஃபாங் விமானத்தில் ஏறவில்லை என்பதைக் கண்டறிந்தார். அதே நாள் அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில், தன்னிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்