தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா மீட்டுக்கொள்ளப்படும்

1 mins read
8181702f-d304-41f6-942a-1e5a63e0cf95
எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை எஸ்பி முத்தையா & சன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் இறக்குமதி செய்கிறது.  - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் பூச்சிக்கொல்லி வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதனால் அந்தப் பொருளை மீட்டுக்கொள்வதாக அமைப்பு அறிவித்துள்ளது.

எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை எஸ்பி முத்தையா & சன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரில் இறக்குமதி செய்கிறது. அது மீட்டுக்கொள்ளும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

அண்மையில் ஹாங்காங்கிலும் எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா மீட்டுக்கொள்ளப்பட்டது. அதில் ‘எத்தலின் ஆக்சைட்’ அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூரும் நடவடிக்கை எடுத்துள்ளது.

‘எத்தலின் ஆக்சைட்’ உணவில் பயன்படுத்த அனுமதி இல்லை. வேளாண் பொருள்கள் நுண்ணுயிர் கிருமிகளால் கெட்டுப்போகாமல் இருக்க ‘எத்தலின் ஆக்சைட்’ பயன்படுத்தப்படும்.

சிங்கப்பூரில் மசாலாப் பொருள்களில் கிருமிகளை ஒழிக்க ‘எத்தலின் ஆக்சைட்’ பயன்படுத்தப்படும். இருப்பினும் அது அளவு குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும்.

‘எத்திலின் ஆக்சைட்’ இருக்கும் உணவை நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட்டால் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படலாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

செப்டம்பர் 2025 காலாவதி தேதி கொண்ட எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவை வாங்கியவர்கள் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்