தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் தலைசிறந்த விமான நிலையம்: சாங்கிக்கு இரண்டாவது இடம்

1 mins read
4159c265-c1ad-42c9-a2de-6f151dba33e8
கத்தார் தலைநகர் தோ‌‌‌ஹாவில் உள்ள ஹமாத் அனைத்துலக விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. - படம்: ஹமாத் அனைத்துலக விமான நிலையம் 

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வந்துள்ளது.

கத்தார் தலைநகர் தோ‌‌‌ஹாவில் உள்ள ஹமாத் அனைத்துலக விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தென்கொரியாவின் இன்சியான் அனைத்துலக விமான நிலையத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

பட்டியலை லண்டனைத் தளமாகக் கொண்டுள்ள ஸ்கைடிராக்ஸ் வெளியிட்டது.

புதன்கிழமை (ஏப்ரல் 17) ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடந்த 2024 உலக விமான நிலைய விருது நிகழ்ச்சியில் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஆசியாவின் சிறந்த விமான நிலையமாக சாங்கி விமான நிலையம் வந்துள்ளது. குடிநுழைவுச் சேவைகளில் உலக அளவில் சாங்கி விமான நிலையத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டல் சிறந்த விமான நிலைய ஹோட்டல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது முறையாக அந்த விருதை கிரவுன் பிளாசா பெற்றுள்ளது.

விமான நிலையம் குறித்த தரவுகளை ஸ்கைடிராக்ஸ் ஆகஸ்ட் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை நடத்தப்பட்டது. விமான நிலையப் பயணிகளிடம் வெவ்வேறு சேவைகள் குறித்து கருத்தாய்வு நடத்தி தகவல் வெளியிட்டதாக ஸ்கைடிராக்ஸ் தெரிவித்தது.

ஹமாத் அனைத்துலக விமான நிலையம் 2021, 2022ஆம் ஆண்டுகளிலும் முதலிடத்தைப் பிடித்தது.

சாங்கி விமான நிலையம் 2023ஆம் ஆண்டு முதலிடத்தைப் பிடித்தது. இதுவரை சாங்கி விமான நிலையம் 12 முறை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்