தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்றாவது ஆண்டாக நடக்கவுள்ள சிங்கப்பூர் நல்வாழ்வு விழா

1 mins read
7bd4c121-ec03-4123-9585-b63321ca2f4e
சிங்கப்பூர் நல்வாழ்வு விழா ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை நடக்கிறது.  - படம்: சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம் 

உள்ளூர்வாசிகளையும் சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கும் விதமாக சிங்கப்பூர் நல்வாழ்வு விழா நடக்கவுள்ளது.

மூன்றாவது ஆண்டாக நடக்கவிருக்கும் சிங்கப்பூர் நல்வாழ்வு விழா ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு நல்வாழ்வு விழா மூன்று வாரங்கள் நடந்தது.

இம்முறை தீவு முழுவதும் 120க்கும் மேற்பட்ட நல்வாழ்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக விழாவை நடத்தும் சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் தெரிவித்தது.

விழாவிற்கு 75க்கும் மேற்பட்ட பங்காளி அமைப்புகள் உதவுவதாகவும் கழகம் தெரிவித்தது.

பொதுமக்களிடம் உடல்நலம், மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்வாழ்வு விழாவின் நோக்கம்

விழாவில் உடலுறுதி, தியானம், கலை, வாழ்வியல், பொழுதுபோக்கு என பலதரப்பு அனுபவங்களை பொதுமக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பய­ணத்­து­றைக் கழ­கம் தெரிவித்தது.

சிங்கப்பூர் நல்வாழ்வு விழா குறித்த தகவல்களை www.wellnessfest.sg என்ற இணையப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்

குறிப்புச் சொற்கள்