தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இத்தாலிய கலைக் கண்காட்சியில் சிங்கப்பூர் ஓவியங்கள்

1 mins read
51549365-3a3b-4b33-bfcc-1a6c72130cea
60ஆவது முறையாக வெனிஸ் பியன்னேல் கலைக் கண்காட்சி நடக்கிறது. அதில் 11வது முறையாக சிங்கப்பூர் பங்கேற்கிறது. - படங்கள்: தேசியக் கலைக்கூடம்

உலகப் புகழ்பெற்ற இத்தாலியின் வெனிஸ் பியன்னேல் கலைக் கண்காட்சியில் சிங்கப்பூர் ஓவியங்கள் இடம்பெறுகின்றன.

சிங்கப்பூரர்களின் ஓவியங்களை ‘சிங்கப்பூர் பெவிலியன்’ எனும் பகுதியில் காணமுடியும். உள்ளூர் கலைஞர் ராபர்ட் சோ ரென்ஹுய் கண்காட்சியில் சிங்கப்பூரை பிரதிநிதிக்கிறார்.

சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தின் கலைப் படைப்புகள் முதல் முறையாக வெனிஸ் பியன்னேல் கலைக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. மேலும் இரண்டு சிங்கப்பூர் ஓவியர்களின் படைப்புகளும் கண்காட்சியில் இடம்பிடித்துள்ளன.

60ஆவது முறையாக வெனிஸ் பியன்னேல் கலைக் கண்காட்சி நடக்கிறது. அதில் 11வது முறையாக சிங்கப்பூர் பங்கேற்கிறது. கலைக் கண்காட்சி நவம்பர் 24ஆம் தேதிவரை நடக்கிறது.

பியன்னேல் கலைக் கண்காட்சியை ஆண்டிற்கு 500,000க்கும் அதிகமானோர் பார்வையிடுகின்றனர்.

இந்நிலையில் தேசியக் கலைக்கூடத்தில் இருந்து மொத்தம் 8 படைப்புகள் மற்றொரு கண்காட்சியில் வைக்கப்படுகிறது. அதில் உலகெங்கிலும் இருந்து 331 ஓவியர்களின் படைப்புகள் இடம்பெறுகின்றன.

தென்கிழக்கு ஆசியாவில் கலைப் படைப்புகளின் மையமாக தேசியக் கலைக்கூடம் உள்ளது. இதில் பல்வேறு நவீன ஓவியங்கள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்