அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் கலந்துரையாடல்

அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் கலந்துரையாடல்

படம்: இணையம்

21 Apr 2024 - 2:19 pm

1 mins read

கீழடி அகழாய்வு அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 22ஆம் தேதி, திங்கட்கிழமை இரவு மணி 7.00 முதல் 9.00 வரை தேசிய நூலக வாரியத்தின் 5ஆவது மாடியில் உள்ள பாசிபிலிட்டி அறையில் நடைபெறும்.

கீழடி குறித்தும் தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் குறிப்பாக ஆதிச்சநல்லூர், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் அகழாய்வுப் பணிகள் குறித்தும் திரு அமர்நாத் ராமகிருஷ்ணா பேசுவார்.

அதன் பிறகு கலந்துரையாடல் இடம்பெறும். தொல்லியல் ஆர்வலர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், பொது மக்களும் கட்டணமின்றி நடத்தப்படும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் இரவு உணவு வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்