தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகப் பெரிய உட்புற காய்கறிப் பண்ணைகள்: திட்டத்தைக் கைவிட்ட வெர்டிவெஜிஸ்

3 mins read
d19e866f-8e9b-4a8b-91e8-24b763f56a1b
ஒரு மூடப்பட்ட அமைப்பில் பயிர்களை செங்குத்தாக வளர்ப்பது, சிறிய அளவிலான நகர்ப்புற விவசாயத்திற்கான சிறந்த உணவு உற்பத்தி தீர்வாகும். - படம்: கிரீன்லோஜி

குடியரசின் மிகப் பெரிய உட்புற காய்கறி பண்ணைகளை அமைத்து, அதன் மூலம் உள்ளூர் காய்கறி உற்பத்தியில் 10 விழுக்காட்டு பங்களிப்பை வழங்க முனைப்புடன் இருந்த ஒரு நிறுவனம் அதன் திட்டங்களைக் கைவிட்டு விட்டது. உட்புற காய்கறி பண்ணைகளை அமைக்க அதற்கு வழங்கப்பட்ட நிலத்தை அது அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டது அதற்குக் காரணம்.

வெர்டிவெஜிஸ் எனும் அந்த உள்ளூர் பண்ணை, அதன் இரண்டு ஹெக்டர் நிலத்தில் நாள்தோறும் 6 டன் காற்கறிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதுபோல், மூன்று ஆண்டுகளுக்குள் அதனால் லிம் சூ காங்கில் அந்தப் பண்ணையைக் கட்டி முடிக்க இயலவில்லை. தனது இணை முதலீட்டு பங்காளியான சீனாவின் ‘சனான்போ’ நிறுவனத்துடன் வெர்டிவெஜிஸ் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டது. பண்ணைக்குத் தேவையான உற்பத்தி வன்பொருளை சீன நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை.

அதன் விளைவாக, வெர்டிவெஜிஸ் தன்னிடம் கொடுக்கப்பட்ட நிலத்தை 2022ல் சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் திரும்ப ஒப்படைத்தது என்று அறியப்படுகிறது.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உள்ளூர் ஊட்டச்சத்து தேவைகளில் 30 விழுக்காட்டை சிங்கப்பூரிலேயே உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2022ல் சிங்கப்பூரின் காய்கறியின் மொத்த விநியோகம் 537,800 டன்னாக இருந்தது. அதில் 4% உள்ளூர் காய்கறி உற்பத்தியின் மூலம் கிடைக்கப்பெற்றது. வெர்டிவெஜிஸ் நிறுவனத்தின் திட்டம் நிறைவேறி இருந்தால், அது உள்ளூர் காய்கறித் தேவையில் 10 விழுக்காட்டை நிறைவேற்றியிருக்கும் என்று 2020ல் எம்ஐடி தொழில்நுட்ப ஆய்வறிக்கை தெரிவித்தது.

முன்னைய திட்டம் கைகூடாவிட்டாலும் சிங்கப்பூரின் 30/30 திட்டத்திற்குப் பங்களிக்க தனது வர்த்தக உத்திகளைத் திருத்தியமைக்க வெர்டிவெஜிஸ் எண்ணம் கொண்டுள்ளது. ஆனால் அது பற்றி அந்நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

லிம் சூ காங்கில் அமையவிருந்த செங்குத்தான பண்ணையைத் தவிர, வெர்டிவெஜிஸ் நிறுவனத்துக்கு அறிவியல் பூங்காவில் ஆய்வு மற்றும் புத்தாக்க நிலையமும் உண்டு என்று அதன் 2023 நிதியாண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அக்ரிமெக்ஸ் வென்சர்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாகவும் விளங்குகிறது வெர்டிவெஜிஸ். அக்ரிமெக்ஸ் வென்சர்ஸ் விதை மரபியல் வளர்ச்சி போன்ற விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது என்று அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் உணவு உற்பத்தி துறையின் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க பள்ளிகளுடனும் உயர்கல்வி நிலையங்களுடனும் அந்நிறுவனம் பணியாற்றி வருகிறது.

சனான்பியோ நிறுவனத்திடமிருந்து தேவையான அறிவுசார் சொத்து ஆதரவு கிடைக்கவில்லை என்று வெர்டிவெஜிஸ் கூறியுள்ளது. இரு நிறுவனங்களின் பங்காளித்துவ முறையின் மூலம் சனான்பியோவின் தரவுக் களஞ்சியத்தை வெர்டிவெஜிஸ் நிறுவனத்தால் பயன்படுத்த முடியும். அதன் விளைவாக, காய்கறிகளை விரைவாகவும் சிறந்த முறையிலும் உற்பத்தி செய்ய இயலும்.

“சனான்பியோ நிறுவனத்திடமிருந்து ஆதரவு கிடைக்காத காரணத்தால், எங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது. சனான்பியோவின் சொத்து, கட்டுமானம், வடிவமைப்பு, ஒப்பந்தப்புள்ளி ஆகியவற்றில் நாங்கள் பெரிய அளவில் முதலீடு செய்திருந்தோம்,” என்றும் வெர்டிவெஜிசின் நிதியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் உணவு அமைப்பின் பண்ணை உருவாக்கத்துக்கான வேளாண் நிலம் குறித்த ஒப்பந்தப் புள்ளி நிபந்தனைகளைப் பார்க்கும்போது, ஒப்பந்தப்புள்ளி பெற்ற மூண்றாண்டுகளுக்கும் பண்ணைகள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். கட்டுமானப் பணி முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் சிங்கப்பூர் உணவு அமைப்பிடமிருந்தும் பண்ணை உரிமத்துக்கு விண்ணப்பம் செய்யலாம். உரிமம் கிடைத்தவுடன் பண்ணை செயல்படத் தொடங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்குள் பண்ணையின் உருவாக்கம் முடிந்துவிட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும், பருவநிலை, இறுக்கமான தொழிலாளர் சந்தை, தொற்றுக் கிருமிகள் மற்றும் இதர தவிர்க்க முடியாத காரணங்களால் பண்ணையின் கட்டுமானம் தாமதமாகலாம்.

வெர்டிவெஜிசை பொறுத்தவரை, கொவிட்-19 பெருந்தொற்று அதன் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தியது தாக்கியது என்றும் அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்