அனுமதியின்றி கைதிகள் விவரங்களைச் சோதித்ததாக முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு

அனுமதியின்றி கைதிகள் விவரங்களைச் சோதித்ததாக முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு

1 mins read
7221cca2-855c-45f8-b42e-1677954b8c90
படம்: - பிக்சாபே

பணி தொடர்பான இணையவாசலைப் பயன்படுத்தி, அனுமதியின்றி 34 கைதிகளின் விவரங்களைச் சோதித்ததாகச் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

31 வயதாகும் அகமது ரிஹ்யாத் அப்துல் ரஹிம், 2022 ஏப்ரலுக்கும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடையே அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூர் சிறைத்துறை சேவை, அகமது அவ்வாறு செய்ததாகக் கூறப்படுவதைக் கண்டுபிடித்த பிறகு அவர் தனது பணியிலிருந்து விலகினார்.

கணினியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டத்தின்கீழ் அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மே 27ஆம் தேதி, மாவட்ட நீதிமன்றத்தில் அகமது அந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பர் சாங்கி ரோட் நார்த்திலுள்ள செலராங் பார்க் வளாகக் கல்வி நிலையம் எஸ்1ஏவில், ஏப்ரல் 22ல் அகமது, ஆண் கைதி ஒருவரைக் குறித்த விவரங்களைச் சோதித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் 2022 ஜூலை 13க்கும் செப்டம்பர் 3ஆம் தேதிக்கும் இடையே பெண் கைதி ஒருவரின் விவரங்களை அகமது எட்டு முறை சோதித்ததாகக் கூறப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் 2023 பிப்ரவரிக்கும் இடையே மேலும் 32 கைதிகளின் விவரங்களை அவர் சோதித்தாகச் சொல்லப்படுகிறது.

சிறைத்துறை அளித்த புகாரின் பேரில் 2023 மே 30ஆம் தேதி காவல்துறை அகமதைக் கைது செய்தது.

குறிப்புச் சொற்கள்