இணையத்தில் சந்தித்த காதலருக்காக வங்கிக் கணக்கு தொடங்கிய பெண்

இணையத்தில் சந்தித்த காதலருக்காக வங்கிக் கணக்கு தொடங்கிய பெண்

1 mins read
இணையக் காதல் மோசடியில் அது பயன்படுத்தப்பட்டது
6d436763-5507-4693-a077-847da7e5915b
படம்: - பிக்சாபே

திருமணமான 50 வயது லிம் கெக் ஹோங், இணையத்தில் அறிமுகமான ‘கெல்வின் லின்’ எனும் ஆடவர்மேல் காதல் கொண்டார்.

ஆடவர் கேட்டுக்கொண்டதால் அவருக்காகப் புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க ஒப்புக்கொண்டார்.

2023ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அந்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இணையக் காதல் மோசடிச் சம்பவங்களில் இருவர் மொத்தம் $167,000 தொகையை இழந்ததாகக் கூறப்படுகிறது.

மோசடிக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து லிம்முக்கு ஏப்ரல் 22ஆம் தேதி ஏழு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மோசடியில் ஈடுபடாவிட்டாலும் லிம் அந்த வங்கிக் கணக்கைத் தான் மட்டுமே பயன்படுத்துவதாக வங்கியிடம் தெரிவித்ததை அரசாங்க வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி புதிய வங்கிக் கணக்கைத் திறந்த லிம், பின்னர் ஜூரோங் உணவகம் ஒன்றில் அதற்கான வங்கி அட்டையை லிம்மிடம் கொடுத்ததாகக் கூறப்பட்டது.

பிப்ரவரி 13ஆம் தேதியே லிம் இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு வரத் தவறியதால் அவருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.

மார்ச் 27ஆம் தேதி காவல்துறை லிம்மைத் தொடர்புகொண்டது. ஐந்து நாள்கள் கழித்து அவர் அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

குறிப்புச் சொற்கள்