தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவு விரைவுச்சாலையில் விபத்து: பல வாகனங்கள் சேதம், மருத்துவமனையில் அறுவர்

1 mins read
ee2a14fc-3df5-43ec-b70f-1276afc5f45f
விபத்தில் குறைந்தது நான்கு கார்கள் சேதமடைந்ததாக அறியப்படுகிறது. - படம்: டெலிகிராம்

தீவு விரைவுச்சாலையில் பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து, ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து ஏப்ரல் 22ஆம் தேதி இரவு நிகழ்ந்தது.

துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் புக்கிட் தீமா விரைவுச்சாலை நுழைவாயிலுக்கு முன்பாக விபத்து ஏற்பட்டுள்ளதாக இரவு சுமார் 9.40 மணி அளவில் தகவல் கிடைத்தது எனச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

விபத்தில் சிக்கியவர்களில் மூவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் மற்ற மூன்று பேர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தில் குறைந்தது நான்கு கார்கள் சேதமடைந்ததாக டெலிகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் பார்க்க முடிந்தது.

விபத்து காரணமாக விரைவுச்சாலையின் இடது பக்கத்தில் உள்ள இரண்டு சாலைத் தடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்து