சிங்கப்பூரின் முதல் தொகுப்பு பணத்தாள்களை நினைவுப் பொருளாக வாங்கலாம்

சிங்கப்பூரின் முதல் தொகுப்பு பணத்தாள்களை நினைவுப் பொருளாக வாங்கலாம்

1 mins read
75daa886-a83d-42de-9d64-f8b3b64d8808
ஆர்கிட் தொகுப்பை சேர்ந்த பணத்தாள்கள் 1967ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை அச்சிடப்பட்டு வந்தன.  - படம்: சிங்கப்பூர் நாணய ஆணையம்
Google News Preferred Icon

நாணயங்களைச் சேகரிப்போர் சிங்கப்பூரின் முதல் தொகுப்பு பணத்தாள்களை நினைவுப் பொருளாக வாங்க சிங்கப்பூர் நாணய ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

குறிப்பிட்ட அளவில் மட்டுமே அந்த முதல் தொகுப்பு பணத்தாள்கள் விற்பனைக்கு வருகின்றன.

மேலும் 500 வெள்ளி தாள்களின் மாதிரிகளும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது 500 வெள்ளி தாள்கள் அச்சிடப்படுவதில்லை.

மாதிரி பணத்தாள்கள் 999 வகை தங்கம் அல்லது 999 வெள்ளியில் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டது.

மாதிரி பணத்தாள்கள் 9 மதிப்புகளில் வெளிவரவுள்ளன. 1 வெள்ளி முதல் 10,000 வெள்ளி வரை அது இருக்கும். அவை ஆர்கிட் தொகுப்பை சேர்ந்தவை.

இந்த பணத்தாள்கள் 1967ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை அச்சிடப்பட்டு வந்தன.

சிங்கப்பூரில் 1967ஆம் ஆண்டு முதல் நான்கு தொகுப்பு பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. ஆர்கிட், பறவைகள், கப்பல்கள் மற்றும் தற்போது புழக்கத்தில் உள்ள உருவப்படங்கள் கொண்ட தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 1,888 முதல் தொகுப்பு பணத்தாள்கள் 4.6 கிராம் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றின் விலை ஒவ்வொன்றும் 1000 வெள்ளி.

6,888 முதல் தொகுப்பு பணத்தாள்கள் 40 கிராம் வெள்ளியில் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றின் விலை ஒவ்வொன்றும் 460 வெள்ளி.

நாணயங்கள் தொடர்பான தகவல்களுக்கும் மேல் விவரங்களுக்கும் www.singaporemint.com என்ற இணையப்பக்கத்தை அணுகவும்.

குறிப்புச் சொற்கள்