புதுவகை மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

புதுவகை மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

1 mins read
fcd3a885-988d-469e-a8a1-038b331924aa
வரவுசெலவு 2024 திட்டம் தொடர்பில் மோசடித் தகவல் வரைகலை சம்பந்தப்பட்ட புதுவகை மோசடிகள் இணையத்தில் வலம் வருகின்றன. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

வரவுசெலவு 2024 திட்டம் தொடர்பில் மோசடித் தகவல் வரைகலை சம்பந்தப்பட்ட புதுவகை மோசடிகள் இணையத்தில் வலம் வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

நிதி அமைச்சிடமிருந்து வருவதாகக் கூறப்படும் 2024 வரவுசெலவு திட்டம் குறித்த தகவல் வரைகலையை உள்ளடக்கிய டெலிகிராம் செய்தி பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கும்.

அந்த வரைகலையுடன் கூடிய இணைப்பைச் சொடுக்கினால் வேறொரு மோசடி இணையப்பக்கத்திற்குக் கொண்டுசெல்லும்.

‘அரசாங்க உதவி’ எனக் கூறி அதற்குத் தகுதியைச் சரிபார்க்க, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பெயர்களையும் டெலிகிராம் கணக்குகளின் தொடர்பு எண்களையும் வழங்க கேட்டுக்கொள்ளப்படுவர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் விவரங்களை நிரப்பி சரிபார்ப்பு பொத்தானை சொடுக்கினால், புதிய சாதனம் ஒன்று தங்கள் கணக்கிற்குள் நுழைய முற்பட்டதாக டெலிகிராமிடம் இருந்து தகவல் கிடைக்கும்.

அந்த மோசடி தகவல் வரைகலை, பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புப் பட்டியலில் உள்ள மற்ற டெலிகிராம் பயனர்களுக்கும் அனுப்பப்படும். ‘முதலீட்டு வாய்ப்புகள்’ எனக் கூறப்படும் அறியப்படாத டெலிகிராம் குழு உரையாடல்களில் அவர்கள் சேர்க்கப்படுவர்.

நிதி அமைச்சு அதன் அதிகாரபூர்வ தளங்கள் வழியாக மட்டுமே தகவலை வெளியிடும் என்று காவல்துறை எச்சரித்தது.

குறிப்புச் சொற்கள்