வாகன உரிமைச் சான்றிதழ்கள் 2.7% அதிகரிப்பு

வாகன உரிமைச் சான்றிதழ்கள் 2.7% அதிகரிப்பு

1 mins read
33f4ea4a-7969-4391-bd2b-3ee2634c80c7
சிறிய, பெரிய வகை கார்கள், சரக்கு வாகனங்கள், பொதுப் பிரிவு ஆகியவற்றுக்காக கூடுதல் வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மே மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கூடுதல் வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

மொத்தம் 15,104 வாகன உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்படும் சான்றிதழ்களின் எண்ணிக்கையைவிட இது 2.7 விழுக்காடு அதிகம்.

சிறிய வகை கார்களுக்கான சான்றிதழ்கள் 5,609லிருந்து 5,775ஆக உயர்த்தப்படும்.

பெரிய வகை கார்களுக்கான சான்றிதழ்கள் 3,895லிருந்து 3,994ஆக ஏற்றம் காணும்.

சரக்கு வாகனங்களுக்கான சான்றிதழ்கள் 1,170லிருந்து 1,232ஆக அதிகரிக்கப்படும்.

பொதுப் பிரிவுக்கான சான்றிதழ்கள் 928லிருந்து 1,048ஆக உயர்த்தப்படும்.

மோட்டார் சைக்கிள்களுக்கான சான்றிதழ்களில் மாற்றம் இல்லை.

குறிப்புச் சொற்கள்