சிங்கப்பூரில் மீட்டுக்கொள்ளப்படும் பிரெஞ்ச் பாலாடைக் கட்டி

1 mins read
4c639407-ade3-403e-b2bb-79d1fbe86ff6
சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் ‘ஃப்ரோமேகேரி பிளாங்க்’ நிறுவனத்தின் ஆட்டுப் பாலாடைக் கட்டிகள். - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

பிரான்­சில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் ஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட மூன்று வகையான பாலாடைக் கட்டிகளைச் சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளச் சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது. இந்தத் தயாரிப்புகளில் ஆபத்தான நுண்ணுயிர் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைப்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 24) தெரிவித்தது.

உணவு மற்றும் தீவனத்திற்கான விரைவு விழிப்­பு­ணர்வு ஐரோப்­பிய ஆணை­யம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து ‘ஃப்ரோமேகேரி பிளாங்க்’ நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு பாலாடைக் கட்டிகளை மீட்டுக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமைப்பு கூறியது.

இத்தயாரிப்புகளை மீட்டுக்கொள்ளுமாறு இறக்குமதியாளரான ‘சிம்போனி டபிள்யூ & சி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தை அமைப்பு கேட்டுகொண்டுள்ளது. திரும்பப்பெறும் நடவடிக்கைத் தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்