வீவக மறுவிற்பனை விலை தொடர்ந்து அதிகரிப்பு; கூடுதல் வீடுகள் விற்பனை

1 mins read
01343c48-5aa6-4bcf-8028-efbe405e0451
வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து தொடர்ச்சியாக 16 காலாண்டுகளாக அதிகரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1.8 விழுக்காடு ஏற்றம் கண்டது.

அதற்கு முந்தைய காலாண்டில் அது 1.1 விழுக்காடு அதிகரித்தது.

வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து தொடர்ச்சியாக 16 காலாண்டுகளாக அதிகரித்துள்ளது.

இந்தத் தகவலை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஏப்ரல் 26ஆம் தேதியன்று வெளியிட்டது.

மறுவிற்பனை வீடுகளுக்கான சந்தை சீரடைந்து வருவதாக வீவக கூறியது.

2023ஆம் ஆண்டில் மறுவிற்பனை வீடுகளின் விலை 4.9 உயர்ந்தது.

2022ஆம் ஆண்டு பதிவான 10.4 விழுக்காடு அதிகரிப்பைவிட இது குறைவு.

2021ஆம் ஆண்டில் வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 12.7 விழுக்காடு ஏற்றம் கண்டது.

இதற்கிடையே, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 7,068 வீவக மறுவிற்பனை வீடுகள் கைமாறின.

2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 8 விழுக்காடு அதிகம்.

குறிப்புச் சொற்கள்