தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்

1 mins read
47d0b5ee-d500-42d3-8825-6a1eb4a6c234
ஓவியர் கைவண்ணத்தில் ஹோட்டல் இண்டிகோ சாங்கி விமான நிலையம். - படம்: ஓயுஇ லிமிடெட்

சாங்கி விமான நிலையம் முனையம் 2ல், 2028ஆம் ஆண்டுக்குள் புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் இண்டிகோ பூட்டிக் நிறுவனத்தின்கீழ் இந்த 255 அறைகள் கொண்ட ஹோட்டல் கட்டப்படுகிறது.

ஹோட்டல் இண்டிகோ சாங்கி விமான நிலையம், சிங்கப்பூரில் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத முதல் ஹோட்டலாகத் திகழும் என்று கூறப்படுகிறது.

சாங்கி விமான நிலையத்தில் ஏற்கெனவே இரண்டு ஹோட்டல்கள் உள்ளன.

ஹோட்டல் இண்டிகோ, விமான நிலையத்தில் மூன்றாவது ஹோட்டலாக இயங்கும்.

முனையம் 2ன் தெற்கு முனையில், பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்துக்கு மேல் ஹோட்டல் கட்டப்படும்.

பயணிகள் புறப்பாடு பகுதியிலிருந்து புதிய ஹோட்டலுக்கு இணைப்புப் பாதை மூலம் சென்றுவிடலாம்.

குறிப்புச் சொற்கள்