தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்; நால்வர் கைது

1 mins read
c3c86657-339d-476e-8e81-94844f27a4d5
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் எரிபொருள் ஏந்திச் செல்லும் கனரக வாகனம் மூலம் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். - படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

சுங்கை காடுட் வட்டாரத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய 2,952 பெட்டிகளை சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 23ஆம் தேதியன்று பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் மலேசியர்.

இவர்கள் 23 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஏறத்தாழ $319, 914 வரி செலுத்தப்படவில்லை என்று ஏப்ரல் 26ஆம் தேதியன்று சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் எரிபொருள் ஏந்திச் செல்லும் கனரக வாகனம் மூலம் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்