தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள்: 16 வயதுபெண் உட்பட 67 பேர் கைது

1 mins read
9c03dcad-f9ae-4930-acd1-6903391d6855
கஞ்சா, ஹெராயின் ஆகிய போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

தீவு முழுவதும் ஆறு நாள்கள் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதன்விளைவாக, போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 16 வயது பதின்மவயது பெண் உட்பட மொத்தம் 67 பேர் கைது செய்யப்பட்டனர்.

$62,000 மதிப்புள்ள கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் ஏப்ரல் 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

மேலும், ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 26ஆம் தேதி வரை அல்ஜுனிட், புக்கிட் பாத்தோக், புக்கிட் மேரா, கார்பரேஷன் டிரைவ் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் ஈடுபட்டதாக அதில் குறிப்பிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்