$3.1 பி. ரொக்கமற்ற சொத்து மதிப்பிழப்பு; சிங்டெல் முன்னுரைப்பு

$3.1 பி. ரொக்கமற்ற சொத்து மதிப்பிழப்பு; சிங்டெல் முன்னுரைப்பு

1 mins read
bd112f46-4878-49ee-977e-1dac91130744
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடையும் நிதி ஆண்டுக்கு குறைவான லாபம் பதிவாகும் என்றும் சிங்டெல் கூறியது. - படம்: சாவ்பாவ்

2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரொக்கமற்ற சொத்துகளின் மதிப்பிழப்பால் தனக்கு $3.1 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சிங்டெல் நிறுவனம் ஏப்ரல் 29ஆம் தேதியன்று முன்னுரைத்தது.

இதனால் 2024ஆம் நிதி ஆண்டின் பிற்பகுதியில் சிங்டெலுக்கு ஒட்டுமொத்த அடிப்படையில் இழப்பு ஏற்பட்டதாக ஆகிவிடும்.

அதுமட்டுமல்லாது, 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடையும் நிதி ஆண்டுக்கு குறைவான லாபம் பதிவாகும் என்றும் சிங்டெல் கூறியது.

இந்நிலையில், பங்குச் சந்தையில் சிங்டெல்லின் பங்குவிலை சரிந்தது.

ஏப்ரல் 29ஆம் தேதி காலை 9.25 மணி நிலவரப்படி அது ஏழு காசு குறைந்து $2.34ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்